சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்30 பெண்களுக்கு தையல் பயிற்சி சான்றிதழ்எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில்30 பெண்களுக்கு தையல் பயிற்சி சான்றிதழ்எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
சேலம்

சூரமங்கலம்

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மெய்யனூரில் புரட்சித்தலைவி அம்மா இலவச தையல் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு ஏராளமான பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலவசமாக தையல் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு தையல் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், மாநகர பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், பகுதி செயலாளர்கள் மாரியப்பன், சண்முகம், பாண்டியன், யாதவமூர்த்தி, வட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story