கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்


கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
x

ஆரணி அருகே கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் வாயிலாக மரக்கழிவில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள விஸ்வகர்மா பேரவை கட்டிடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காதி கிராம தொழில் ஆணையத்தின் மாநில இயக்குனர் பி.என்.சுரேஷ் பயிற்சியில் உருவாக்கப்பட்ட பொம்மைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து 20 நாட்கள் பயிற்சி முடித்தவர்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான தச்சுப் பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கி வாழ்த்தி பேசினார். மிர்ன்பாய் என்பவர் பயிற்சி வழங்கினார். முடிவில் ஆரணி சர்வோதய சங்க நிர்வாகி சங்கர் நன்றி கூறினார்.


Next Story