கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
சோளிங்கரில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மாவட்ட அளவில் ஜப்பான் ஷீட்டோ ரீயு கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் பயிற்சி பெற்ற மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜப்பான் ஷீட்டோ ரீயு கராத்தே பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். தலைமை பயிற்சியாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் நகராட்சி 17-வது வார்டு உறுப்பினர் அன்பரசு கலந்து கொண்டு கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கினார். மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாஸ்டர் தர்ஷினி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story