பட்டயப்படிப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர்களுக்கான பட்டயப்படிப்பு பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்
பயிர் மகசூலுக்கான அடிப்படை நல்ல விதை தேர்வு ஆகும். இருப்பினும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லிகள் மற்றும் பூஞ்சான கொல்லிகள் ஆகியவற்றின் தேவை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
இதை நோக்கமாகக் கொண்டு ஐதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்க பயிற்சி நிலையம் மூலம் வேளாண் இடுபொருட்கள் விற்பனையாளர்களுக்கு வேளாண் இடுபொருட்கள் பற்றி அடிப்படை அறிவு அளிக்க புதுக்கோட்டையில் சமிதி குடுமியான்மலை பயிற்சி நிலையத்தின் மூலமாக
வேளாண் விரிவாக்க சேவைக்கான பட்டயப்படிப்பு பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் உழவர் பயிற்சி நிலையம் ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது.
இந்த பட்டயப்படிப்பு பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற 34 பேருக்கு இன்று கலெக்டர் முருகேஷ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) ராமநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) சரவணன் மற்றும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.






