சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ்


சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
x

சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே கர்நாடக மாநில மது பாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த தகவலின்பேரில் தனிப்படையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பால்நாங்குப்பம் பகுதியில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள 3,648 மது பாக்கெட்டுகள், 691 லிட்டர் வெளிமாநில மதுபானம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட தந்தை- மகன் கைது செய்யப்பட்டனர். சிறப்பாக செயல் பட்டு மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் விஜய், முதல்நிலை காவலர் மனோகரன், காவலர்கள் ரூபன் மற்றும் சத்தி ஆகிய 4 பேரை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து, போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கி ஊக்குவித்தார்.


Next Story