சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
ஆலங்காயம் அருகே நடந்த கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஆலங்காயம் அருகே நடந்த பெண் கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் சதீஷ்குமார், கிருபானந்தம், விக்னேஷ் குழுவினருக்கு வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டுக்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story