சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு சான்றிதழ்கள்-கலெக்டர் கவிதாராமு வழங்கினார்
சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் கவிதாராமு வழங்கினார்.
புதுக்கோட்டை
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு காணொலி நிகழ்ச்சியும் நடந்தது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகத்துறை சிறப்பு டாக்டர் சரவணக்குமார் மற்றும் தனியார் மருத்துவமனையின் இதய நோய் துறை சிறப்பு டாக்டர் மனோஜ் ஆகியோருக்கு கலெக்டர் கவிதாராமு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story