நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த பசுமாத்தூரைச் சேர்ந்தவர் மணி. இவரின் மனைவி ராஜேஸ்வரி (வயது 55). இவர் பசுமாத்தூரில் கெங்கையம்மன் கோவில் பின்பக்கம் உள்ள தெரு ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேர் வந்து ராஜேஸ்வரியிடம் ஏதோ ஒரு முகவரி கேட்பதுபோல் நடித்து, திடீரென ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர் கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் பேலீசார் வழக்குப்பதிவு செய்து, சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story