சிறுமி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மாயம்
திங்கள்நகர் அருகே சிறுமி அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மாயமானது.
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
திங்கள்நகர் அருகே உள்ள அழகன்பாறை குன்னங்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது57).நேற்று முன்தினம் இவரது அண்ணன் மகள் பவிதா (4) வேல்முருகன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் சிறுமி அழுது கொண்டே வேல்முருகனிடம் சென்றாள். சிறுமியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்தது. இதுகுறித்து கேட்ட போது ஒரு பெண் தங்க சங்கிலியை பறித்ததாக சிறுமி கூறினாள்.
இதுகுறித்து வேல்முருகன் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண், சிறுமியிடம் இருந்து நகையை பறித்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story