மங்கலம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்
மங்கலம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. விவசாயி. இவருடைய மனைவி தெய்வாத்தாள் (வயது 63). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 30- ந் தேதி இருசக்கர வாகனத்தில் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு அக்ரஹாரப்புத்தூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கோவிந்தசாமி இருசக்கர வாகனத்தை ஓட்ட தெய்வாத்தாள் பின்னால் அமர்ந்திருந்தார். இவர்களுடைய இரு சக்கர வாகனம் மங்கலத்தை அடுத்த வசந்தம்நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கோவிந்தசாமியின் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி திடீரென தெய்வாத்தாள் கழுத்தில் இருந்த 3¾ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மேலும் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியின் உருவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில் மங்கலம் போலீசார் நேற்று சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து ேபாலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் (25) என்பதும், தெய்வாத்தாளிடம் 3¾ பவுன்நகை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை பேலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 3¾ பவுன்நகை மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.