வசியம் செய்து பெண்ணிடம் நகை பறிப்பு


வசியம் செய்து பெண்ணிடம் நகை பறிப்பு
x

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் வசியம் செய்து பெண்ணிடம் நகை பறிப்பு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் பெண்ணை வசியம் செய்து நகை பறித்து சென்ற 3 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண்ணிடம் வசியம்

திருப்பூர் நாச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் கமலவேணி (வயது 52). இவர் திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள தையல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலையில் பணி முடிந்து புதுமார்க்கெட் வழியாக மத்திய பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் அவரிடம் நைசாக பேச்சுக்கொடுத்தனர்.

பின்னர் கமலவேணி அணிந்திருந்த 1 பவுன் தங்க கம்மலை பறித்துக்கொண்டு அவரை பஸ்சில் ஏற்றி அமரவைத்து விட்டு அந்த பெண்கள் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கமலவேணி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், 3 பெண்களும் தன்னிடம் பேச்சுக்கொடுத்து தன்னை வசியம் செய்து விட்டதாகவும், அவர்கள் கேட்டவுடன் கம்மலை கழற்றி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை

அதைத்தொடர்ந்து புதுமார்க்கெட் வீதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

பெண்கள் 2 பேர் கமலவேணியிடம் பேச்சுக்கொடுத்து வருவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story