பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x

ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

4 பவுன் சங்கிலி பறிப்பு

ஒரத்தநாட்டை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சுபத்ரா (வயது29). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரத்தநாடு -திருவோணம் சாலையோரத்தில் பத்துதாக்கு அருகில் உள்ள அவரது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் சுபத்திராவிடம் முகவரி கேட்பது போல் நாடகமாடி, கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

2 வாலிபர்கள் கைது

இதுகுறித்து சுபத்ரா கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா மேற்பார்வையில் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு திருமாலம் பகுதியை சேர்ந்த கட்ட ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் (29), திருக்குவளை நீரமுளை பகுதியை சேர்ந்த ரூபன் என்கிற அமிர்தரூபன் (29) ஆகியோர் சுபத்ராவிடம் சங்கிலியை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story