பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x

கங்கைகொண்டான் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் சங்கிலியை பறித்துச் சென்றார்.

திருநெல்வேலி

மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரின் மனைவி பாப்பா (வயது 62). நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். தாதனூத்து பஸ்நிறுத்தம் பகுதியில் சென்றபோது, அவர்கள் பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மர்மநபர்களில் ஒருவர் பாப்பா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து பாப்பா தாழையூத்து போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story