வருகிற 14-ந்தேதி தேரோட்டம்


வருகிற 14-ந்தேதி தேரோட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2022 12:08 AM IST (Updated: 4 Jun 2022 12:10 AM IST)
t-max-icont-min-icon

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் திருவிழாவில் வருகிற 14-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே அரியக்குடியில் இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. தென் திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி தினந்தோறும் பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.அதன்படி ஹம்சவாகனம், சிம்ம வாகனம், அனுமன் வாகனம், சொர்ண கருடன் வாகனம், வெள்ளி சேஷ வாகனம், யானை வாகனம், வெள்ளி மஞ்சம், சொர்ண குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 11-ந்தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகச்சியாக 14-ந்தேதி மாலை தேரோட்டமும் நடக்கிறது. தொடர்ந்து 15-ந்தேதி கோ ரதமும், 16-ந்தேதி வெள்ளி ரதம் நிகழ்ச்சியும், 17-ந்தேதி இரவு அலங்கார தெப்பம் நிகழ்ச்சியும், மறுநாள் பூப்பல்லக்கும், 19-ந்தேதி கண்மாய்க்கரை மண்டகப்படி சார்பில் மரக்குதிரை மற்றும் பல்லக்கு, 20-ந்தேதி குடிக்காத்தான்பட்டி பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story