சொர்ணகாளீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்


சொர்ணகாளீஸ்வரர் கோவில் வைகாசி   விசாக தேரோட்டம்
x

வைகாசி விசாக தேரோட்டம்

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவிலில் அமைந்துள்ள சொர்ணகாளீஸ்வரர் கோவில் வைகாசி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி திருவிழா

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சவுந்திரநாயகி அம்மன் சமேத சோமேசுவரர் சாமி திருக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த கோவிலில் சாமி, அம்மனுக்கும் பங்குனி, வைகாசி மற்றும் ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது. வைகாசி மாதத்தில் சோமேசுவரர் சவுந்திர நாயகி அம்மனுக்கு திருவிழா நடைபெறுகிறது.

முன்னதாக சோமேசுவரர், சவுந்திரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்ற நிலையில் பெரிய தேரில் சோமேசுவரர், சவுந்திரநாயகி அம்மனும், சிறிய தேரில் சவுந்திரநாயகி அம்மன் மட்டும் அருள்பாலித்தனர்.

தெப்பத்திருவிழா

பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். சவுந்திரநாயகி அம்மன் எழுந்தருளிய தேரை ஏராளமான பெண் பக்தர்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி சிவகங்கை மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அதனைத்தொடர்ந்து இன்று மாலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.


Next Story