ஓரியூரில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா தேர் பவனி
ஓரியூரில் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா தேர் பவனி நடந்தது.
தொண்டி,
திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் 252-ம் ஆண்டு ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா நடைபெற்றது. கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற இந்த ஆலய திருவிழாவில் தினமும் நவநாள் திருப்பலி, மறையுறை நிகழ்த் தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணியஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர். தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆரோக்கிய அன்னை, புனித மிக்கேல் அதிதூதர், புனித அருளானந்தர், சூசையப்பர், புனித சவேரியார் ஆகியோர் பவனி வந்து இறை மக்களுக்கு ஆசீர் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஓரியூர் இயேசு சபை குழுமத்தினர் செய்திருந்தனர். தொண்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.