தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!


தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!
x

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய வங்கக் கடல் பகுதியில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 9 ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், 10ஆம் தேதி அநேக இடங்களிலும், 11, 12, 13ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக் கூடும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தமிழகம், புதுச்சேரி கடற்கரை நோக்கி வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நவம்பர் 14ஆம் தேதி வரை கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story