அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


அடுத்த 3 மணிநேரத்தில்  13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x

அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story