அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு மத்தியில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story