7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு


7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
x

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுமாடு காரணமாக தமிழகத்தில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story