தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையிலும் நேற்று முன் தினம் காலை பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்தது.
இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.