தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
x

கோப்புப்படம் 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஒருபுறம் கத்தரி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மறுபுறம் மிதமான மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. இதற்கிடையே, காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story