சந்திரயான்-3 மாதிரி செயற்கைகோள் பள்ளி மாணவர்கள் வடிவமைத்தனர்


சந்திரயான்-3 மாதிரி செயற்கைகோள் பள்ளி மாணவர்கள் வடிவமைத்தனர்
x

சந்திரயான்-3 மாதிரி செயற்கைக்கோளை பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருள் நகரில் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் தமிழ்நாட்டு அறிவியல் அறிஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக கணினி வழியாக இயக்கப்படும் மாதிரி சந்திரயான்-3 மற்றும் கணினி வழியாக இயக்கப்படும் மாதிரி ரோவர் இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஒலிக்கப்படுவது போன்ற செயல்முறை விளக்கம் அளித்தனர். நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சந்திரயான்-3 ஐ தரையிறக்கி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் தற்போது சந்திரயான் செயல்பாடுகள் அதன் பயன்பாடுகள், அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து மாணவர்கள் பொது மக்களுக்கு தத்ரூபமாக செய்முறை விளக்கம் அளித்தனர்.

10 நாட்களுக்கும் மேலாக நீலன் பள்ளி மாணவர்கள் இணைந்து இந்த மாதிரி சந்திரயான் 3 செயற்கை கோளை வடிவமைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் செயற்கை கோளில் இருந்து பிரக்யான் ரோவர் பிரிந்து வெளியேறிய போது பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக கைகளை தட்டி மகிழ்ச்சி அடைந்தனர். இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story