சிறை அலுவலர் தேர்வு தேதி மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு


சிறை அலுவலர் தேர்வு தேதி மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
x

சிறை அலுவலர் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அறிக்கையில் டிசம்பர் 22 ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் என எழுத்து/ கணினி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறை அலுவலர் பணிகள் தேர்வு டிசம்பர் 26 ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர் ,தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம் ,ராமநாதபுரம் ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை,நாமக்கல், பெரம்பலூர் ,புதுக்கோட்டை ,சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ,அரியலூர் ,செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழி தேர்வு நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story