சென்னை கடற்கரை-சூலூர்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை கடற்கரை-சூலூர்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சென்னை கடற்கரை-சூலூர்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணி, 10.10 மணி, மதியம் 2.30 மணி, மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 8.35 மணி, மதியம் 3.30 மணி, மாலை 7.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் எளவூர் மற்றும் சூலூர்பேட்டை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே காலை 10 மணி, மதியம் 1.20 மணி, 3.20 மணி, மாலை 5.20 மணி, இரவு 8.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே காலை 11.35 மணி, மாலை 6.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை மற்றும் எளவூர் இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-சூலூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story