3-வது பாதைக்காக கன்னியாகுமரி-ஹவுரா ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
3-வது பாதைக்காக கன்னியாகுமரி-ஹவுரா ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
கிழக்கு கடற்கரை ரெயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குர்தா ரோடு கோட்டத்தில் புவனேசுவரம்-மஞ்சேஸ்வர், ஹரிதார்பூர்-தான்மண்டல் ஆகிய பகுதிகளில் 3-வது ரெயில் பாதை போடப்பட்டு வருகிறது. இந்த தண்டவாளங்களை இணைக்கும் பணிக்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரெயில் (வ.எண்.20895) வருகிற 20 மற்றும் 27-ந் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் புவனேசுவரம்-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20896) வருகிற 18-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ஹவுரா வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666) வருகிற 19-ந் தேதி மற்றும் 26-ந் தேதி ஆகிய நாட்களிலும், மறுமார்க்கத்தில் ஹவுரா-கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12665) வருகிற 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.