மதுரை-செகந்திராபாத் வாராந்திர ரெயில் பெட்டிகளில் மாற்றம்
மதுரை-செகந்திராபாத் வாராந்திர ரெயில் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.07191/07192) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலின் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகளுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், செகந்திராபாத்தில் இருந்து வருகிற 17-ந் தேதி புறப்பட்டு மதுரை வரும் ரெயிலிலும், மதுரையில் இருந்து வருகிற 19-ந் தேதி செகந்திராபாத் புறப்பட்டு செல்லும் ரெயிலிலும் பெட்டிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த ரெயில்களில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அதேபோல, மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட அனுராவத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இருமார்க்கங்களிலும் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள சாம்கார்க் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சாம்கார்க் ரெயில் நிலையத்தில் நேற்று முதல் 6 மாத காலத்துக்கு சோதனை அடிப்படையில் தற்காலிகமாக இந்த ரெயில் நின்று செல்லும் என்று வடமேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.