ஓகா-தூத்துக்குடி விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
ஓகா-தூத்துக்குடி விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
மதுரை
தூத்துக்குடியில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவுக்கு விவேக் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தண்டவாள பராமரிப்பு பணிக்காக இந்த ரெயிலின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஓகா கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந் தேதி தூத்துக்குடி புறப்படும் ரெயில் (வ.எண்.19568) ஓகாவிற்கு பதிலாக அகமதாபாத் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும். இந்த ரெயில், ஓகா கோட்டை-அகமதாபாத் ரெயில் நிலையங்களுக்கு இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story