சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-மங்களூரு (வண்டி எண்-22637) இடையே வருகிற 10-ந்தேதி மதியம் 1.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் அரை மணிநேரம் தாமதமாக மதியம் 1.45 மணிக்கு சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும்.
* சென்ட்ரல்-மைசூரு (12609) இடையே வருகிற 10-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் அரை மணி நேரம் தாமதமாக மதியம் 2.15 மணிக்கு இயக்கப்படும்.
* சென்ட்ரல்-கோவை (12679) இடையே வருகிற 10-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2.35 மணிக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story