31-ந்தேதி வரை ரெயில் சேவையில் மாற்றம்


31-ந்தேதி வரை ரெயில் சேவையில் மாற்றம்
x

தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 31-ந்தேதி வரை ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி

தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 31-ந்தேதி வரை ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பகுதியாக ரத்து

தென்னக ரெயில்வேயில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 31-ந்தேதி வரை ரெயில் சேவையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:-

அதன்படி திருச்சியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு காரைக்காலுக்கு செல்லும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:06880) இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை தஞ்சை-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அந்த ரெயில் தஞ்சையில் இருந்து காரைக்கால் செல்லாது.

இதுபோல் மயிலாடுதுறையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:06692) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 6, 7, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை-கடலூர் துறைமுகம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாட்களில் இந்த ரெயில் வழக்கம்போல் மாலை 5.24 மணிக்கு கடலூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.

காரைக்கால்

மேலும் பாலக்காடு டவுனில் இருந்து 6.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:16844) திருச்சி கோட்டை - திருச்சி ஜங்ஷன் இடையே வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் அந்த நாட்களில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வராது. அதுபோல் மேற்கண்ட நாட்களில் திருச்சி-பாலக்காடு டவுன் செல்லும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:16843) திருச்சி ஜங்ஷனில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.12 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும்.

இதுபோல் காரைக்காலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்: 06739) வருகிற 31-ந்தேதி வரை காரைக்கால்-தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அந்த ரெயில் தஞ்சையில் இருந்து மாலை 5.50 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.

புறப்படும் நேரம் மாற்றம்

மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.15 மணிக்கு திருவாரூர் புறப்படும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்:06695) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 6, 7, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் 70 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.25 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும்.

இதுபோல் காரைக்காலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு தஞ்சை புறப்படும் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்: 06457) வருகிற 31-ந்தேதி வரை 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2.20 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும். மேலும் தஞ்சையில் இருந்து மாலை 4.20 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் (ரெயில் எண்: 06683) வருகிற 31-ந்தேதி வரை 25 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.45 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்படும்.

இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story