ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி- கரூர் ரெயில் சேவைகளில் மாற்றம்
ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி- கரூர் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரெயில்கள் ரத்து
சேலம் கோட்டத்தில் ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கரூரில் இருந்து மதியம் 3.55 மணிக்கு திருச்சிக்கு இயக்கப்படும் வண்டி எண் 06882 முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் அடுத்த மாதம் 14, 21 மற்றும் 28-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண் 06123 திருச்சியில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு கரூருக்கு செல்லும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் அடுத்த மாதம் 14, 21 மற்றும் 28-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
பகுதி வாரியாக ரத்து
வண்டி எண். 16844 பாலக்காடு-திருச்சி முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் அடுத்த மாதம் பிப்ரவரி 14, 21 மற்றும் 28-ந்தேதிகளில் பாலக்காடு டவுனில் இருந்து கரூர் ஜங்சனுக்கு மட்டும் இயக்கப்படும். இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண். 16843 திருச்சி-பாலக்காடு டவுன் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி-கரூர் இடையே அடுத்த மாதம் 14, 21 மற்றும் 28-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. கரூர்-பாலக்காடு மட்டுமே இயக்கப்படும்.
மேலும் வண்டி எண் 06809 திருச்சி-ஈரோடு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி-கரூர் இடையே பகுதியாக அடுத்த மாதம் 14, 21 மற்றும் 28-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கரூரில் இருந்து மாலை 6.15 மணிக்கு ஈரோடு புறப்பட்டு செல்லும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.