சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
சேலம்
சேலம்
சேலம் அருகே வீராணம் போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகன டிரைவராக பணியாற்றி வந்தவர் கதிரேசன் (வயது 52). சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் திடீரென ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, 'இவர் பணிக்கு சரியாக வராமல் இருந்ததாகவும், அடிக்கடி விடுமுறை எடுத்து வந்ததாகவும் விடுப்பு நாட்களில் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்ததாகவும் புகார்கள் வந்தது. இதை அடுத்து துணை கமிஷனர் கவுதம் கோயல் விசாரணை நடத்தினார் என்றார்கள். இதையடுத்து அவரது விசாரணை அறிக்கை போலீஸ் கமிஷனரிடம் வழங்கப்பட்டது. அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை, ஆயுதப்படைக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story