குமரி மாவட்டத்தில் சாரல் மழை


குமரி மாவட்டத்தில் சாரல் மழை
x

குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அடையாமடை பகுதியில் 57 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அடையாமடை பகுதியில் 57 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்குப்பருவமழை

தென்மேற்குப் பருவமழை கேரள மாநில பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் குமரி மாவட்டத்திலும் எதிரொலிக்கிறது. கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்து வருகிறது. நேற்று காலையிலும் நாகர்கோவில் உள்ளிட்ட குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மதியம் திடீரென கருமேகக்கூட்டங்கள் திரண்டு இருண்டு காட்சி அளித்தது. கனமழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் சிறிது நேரத்தில் மேகக்கூட்டம் கலைந்து வெயிலின் முகம் தெரிந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

57 மி.மீ. பதிவு

பேச்சிப்பாறை அணை- 11.2, பெருஞ்சாணி அணை- 7.2, புத்தன் அணை- 5.6, சிற்றார்-1 அணை- 2, சிற்றார்-2 அணை-7, மாம்பழத்துறையாறு அணை- 11, முக்கடல் அணை- 5, பூதப்பாண்டி- 3.2, களியல்- 17.3, குழித்துறை- 33, நாகர்கோவில்- 1.4, சுருளக்கோடு- 9, தக்கலை- 14.2, குளச்சல்- 4.2, இரணியல்- 8, பாலமோர்- 25.4, திற்பரப்பு- 14.2, ஆரல்வாய்மொழி- 1, அடையாமடை- 57, குருந்தன்கோடு- 4, முள்ளங்கினாவிளை- 12.2, ஆனைக்கிடங்கு- 8.2 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 360 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 584 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 95 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மற்ற அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. முக்கடல் அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்படுகிறது.


Next Story