ரவுடி கொலை வழக்கில் திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண்


ரவுடி கொலை வழக்கில் திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண்
x

ரவுடி கொலை வழக்கில் திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.

திருச்சி

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமழபாடி அருகேயுள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூச்சி என்கிற சுதாகர்(வயது 41). ரவுடியான இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி முன்விரோதம் காரணமாக பூச்சி என்கிற சுதாகரை அவரது வீட்டின் முன்பு சிலர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாகவும், வெங்கனூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கொலை முயற்சி வழக்கு தொடர்பாகவும் அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(38) என்பவர் திருச்சி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story