கிறிஸ்தவ ஆலயத்திற்கு சீல்


கிறிஸ்தவ ஆலயத்திற்கு சீல்
x

கிறிஸ்தவ ஆலயத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா புல்லமடை குரூப் வல்லமடை கிராமத்தில் சிவகங்கை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட கொக்கூரணி பங்கு சார்ந்த உலக ரட்சகர் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு திருப்பலி, திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதையடுது்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பரிந்துரையின்படி ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர் தற்காலிகமாக ஆலயத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஆலயத்திற்கு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

1 More update

Next Story