சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கு:15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல்கோவை கோர்ட்டில் இன்று தாக்கல்


சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கு:15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல்கோவை கோர்ட்டில் இன்று தாக்கல்
x

சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல்களை போலீசார் இன்று கோவை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர்.

சேலம்

சேலம்

சேலம் வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல்களை போலீசார் இன்று கோவை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர்.

வின்ஸ்டார் இந்தியா நிறுவனம்

சேலத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வின்ஸ்டார் இந்தியா என்ற நிறுவனத்தை சேலத்தில் தொடங்கினார். அதில் ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம் உள்ளிட்டவைகள் தொடங்கி நிறுவனத்தில் குறைந்த முதலீடு செய்தால் அதிகம் பணம் தருவதாக கூறி உள்ளார். மேலும் வீட்டு மனைப்பட்டாக்களும் குறைந்த விலையில் தருவதாக கூறினார்.

இதை நம்பி சேலம் மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணம் கட்டினர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் உரியவர்களுக்கு அவர் பணம் திரும்ப தரவில்லை. இதனால் கோடிக்கணக்கில் மோசடி நடந்தது தெரிந்தது.

குற்றப்பத்திரிகை

இது குறித்து பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த 1,686 பேர் கடந்த 2017-ம் ஆண்டு சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு சிவக்குமாரை கைது செய்தனர். தற்போது சிவக்குமார் ஜாமீனில் உள்ளார்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. தொடர்ந்து போலீசார் குற்றப்பத்திரிகை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 30 பேர்மீது தலா50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது.

வேனில் ஏற்றி சென்றனர்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேர்் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோவை கோர்ட்டில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை வீதம் 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர்.

இதற்காக சேலத்தில் இருந்து கோவைக்கு 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலை போலீசார் வேனில் ஏற்றிச்சென்றனர்.


Next Story