கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஆவினில் அரசு வேலை வாங்கித்தருவதாகவும், பணம் மோசடி செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி வள்ளி மணாளன் முன்னிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இருமோசடி வழக்குகளிலும் சேர்த்து 43 பக்க குற்றப் பத்திரிகையை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ராதிகா குமார் தாக்கல் செய்தார். முதல் வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீதும், 2-வது வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story