தேரோட்டம்


தேரோட்டம்
x

பாளையங்கோட்டை தியாகராஜ நகர் விக்ன விநாயகர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி

‌பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் விக்ன விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 34-வது ஆண்டு சதுர்த்தி விழா மற்றும் 30-வது திருத்தேர் வீதி உலா கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை, சொற்பொழிவு நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். 7-வது மற்றும் 8-வது வடக்கு தெருகளில் தேர் சுற்றி கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தியையொட்டி காலை 7.25 மணிக்கு கும்ப பூஜை, தொடர்ந்து ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.


Next Story