காளியம்மன் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்


காளியம்மன் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 May 2023 11:00 AM IST (Updated: 23 May 2023 11:02 AM IST)
t-max-icont-min-icon

உரிய அனுமதி இல்லாததால் காளியம்மன் கோவில் தேரோட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி

நல்லம்பள்ளி வட்டம் பேடரஅள்ளி ஊராட்சி காளியம்மன் கோவில் கொட்டாய் பகுதியில் காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்று வந்தது. கடந்த ஒரு மாத காலமாக அம்மன் கரகம் 18 கிராமங்களில் உலா வந்தது. பின்னர் கிராமங்கள் வாரியாக தினசரி பூஜைகூடை அழைப்பு, அக்கினிக்குண்டம் திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது அங்கு வந்த நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் ஆகியோர் தேரோட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை. இதனால் தேர் இழுக்க கூடாது. அனுமதி பெற்ற பின்பு தேரை இழுக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து தேர் மண்டு மருந்தீஸ்வரர் கோவில் அருகில் நிலை பெயர்த்து நிறுத்தப்பட்டது. தேரோட்டம் பாதியில் நின்றதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story