சோமேசுவரர்-சவுந்தரநாயகி அம்பாள் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


சோமேசுவரர்-சவுந்தரநாயகி அம்பாள் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவிலில் சோமேசுவரர்-சவுந்தரநாயகி அம்பாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகங்கை

காளையார்கோவில்

காளையார்கோவிலில் சோமேசுவரர்-சவுந்தரநாயகி அம்பாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

காளையார்கோவில் சோமேசுவரர், சவுந்தரநாயகி அம்பாள் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடைபெற்றது.

தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 9-ம் நாளான நேற்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பெரிய தேரில் சோமேசுவரரும், சிறிய தேரில் சவுந்தரநாயகி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரத வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி ஆங்காங்கே நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

தெப்பத்திருவிழா

இன்று மாலை தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டினை காளையார் கோவில் கண்காணிப்பாளர் பாலசரவணன், காளீஸ்வரர் குருக்கள், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மேலாளர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். ஏ.எல்.ஏ.ஆர். அறக்கட்டளை நிர்வாகிகள், அரண்மனை சிறுவயல் ஜமீன்தார், காளையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story