நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்


நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வைகாசி திருவிழாவையொட்டி நாட்டரசன் கோட்டையில் தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

சிவகங்கை,

வைகாசி திருவிழாவையொட்டி நாட்டரசன் கோட்டையில் தேரோட்டம் நடைபெற்றது.

வைகாசி திருவிழா

நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, இதையொட்டி தினசரி பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 31-ந் தேதி 7-ம் நாள் அன்று மாலை தங்கரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

8-ம் நாள் இரவு புகழ்பெற்ற வெள்ளிரதம் நிகழ்ச்சி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வந்தார். இதை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

தேரோட்டம்

9-ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கண்ணுடைய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

விழாவையொட்டி இன்று(சனிக்கிழமை) 10-ம் திருநாள் பூப்பல்லக்கு, முயல் குத்துதல் நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான சமஸ்தான பரம்பரை அறஙகாவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முருகப்பன் செட்டியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story