லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் திருவிழா


லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் திருவிழா
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் சோளிங்கர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சோளிங்கர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கோவில் இணை ஆணையாளர் ஜெயா, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், முன்னாள் எம்.பி. சி.கோபால், முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்திபன், சோளிங்க நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், துணைத் தலைவர் பழனி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.


Next Story