நாறும்பூநாதர் கோவில் தேரோட்டம்


நாறும்பூநாதர் கோவில் தேரோட்டம்
x

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாதர் சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதிஉலா நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை வெள்ளை சாத்தியும், மாலை பச்சை சாத்தியும் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி-அம்பாள் எழுந்தருளியதும், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. முன்னதாக சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.


Next Story