நாய்கள் துரத்தியதில் கீழே விழுந்த மூதாட்டி சாவு


நாய்கள் துரத்தியதில் கீழே விழுந்த மூதாட்டி சாவு
x

களக்காடு அருகே நாய்கள் துரத்தியதில் கீழே விழுந்த மூதாட்டி இறந்தார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்பவருடைய மனைவி லட்சுமி (வயது 70). மனநிலை பாதிக்கப்பட்ட இவருக்கு குழந்தைகள் இல்லை. கணவர் சுப்பிரமணியனும் பிரிந்து சென்று விட்டார். பின்னர் இவர் பத்மநேரியில் பொதுமக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவரை நாய்கள் துரத்தியது. இதனால் பயத்தில் ஓடியவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லட்சுமி இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story