117 அடி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் சாத்தனூர் அணை

117 அடி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் சாத்தனூர் அணை
x

சாத்தனூர் அணையில் 117 அடி நீர் நிரமபி கடல் போல் காட்சியளிக்கிறது.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

சாத்தனூர் அணையில் 117 அடி நீர் நிரமபி கடல் போல் காட்சியளிக்கிறது.

தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும்.

நேற்று முன்தினம் வரை அணையில் இருந்து வினாடிக்கு 650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது அணைக்கு 1,105 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் நேற்று 117 அடியை எட்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 850 கன அடி அளவிற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

Next Story