சாத்தனூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு


சாத்தனூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு
x

சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 115 அடி எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 119 அடி உயரம்

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு,

சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 115 அடி எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

119 அடி உயரம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தின் புகழ்பெற்ற மிகப்பெரிய அணையாகும். இந்த அணையின் உயரம் 119 அடியாகும். இதில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையிலிருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு நீர் மின் நிலையம் மூலம் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.

சாத்தனூர் அணை மூலம் திருவண்ணாமலை நகரம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு கூட்டு குடிநீர் திட்டமும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கிருஷ்ணகிரி அணை நிரம்பி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதாலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதாலும் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஆயிரம் கன அடி அளவிற்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உயர்வடைந்தது. இதன் காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி அளவிற்கு உயர்ந்து தற்போது அணையின் நீர்மட்டம் 114.50 அடியாக நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் பாதுகாப்பு கருதி தற்போது அணையில் இருந்து கால்வாய் மூலம் ஆயிரம் கனஅடியும் மின் உற்பத்தி நிலையம் மூலம் ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எக்காரணத்தைக் கொண்டும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்வரத்து குறித்து 24 மணி நேர கண்காணிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story