மதுரை கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்


மதுரை கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

மதுரை

சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் மதுரை ஐகோர்ட்டு விதித்த தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடைவிதித்தது.

மேலும் ஜாமீன் நிபந்தனைகளை ஜகோர்ட்டு பதிவாளர் விதிக்காலம் என்றும் உத்தரவிட்டது. அதன்பேரில் நாள்தோறும் மதுரை மாவட்ட 6-வது கோர்ட்டில் ஆஜராவது உள்ளிட்ட சில நிபந்தனைகளை ஐகோர்ட்டு விதித்தது. அதன்படி சவுக்கு சங்கர், நேற்று காலை 10 மணி அளவில் மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர் 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி, கையெழுத்து போட்டுவிட்டு சென்றார். அடுத்த உத்தரவு வரும் வரை நாள்தோறும் அவர் கோர்ட்டில் கையெழுத்திடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story