நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி


நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அடுத்த கோட்டையூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி செல்வம் (வயது 43). இவரது அண்ணன் மகளுக்கு நீதித்துறையில் வேலை வாங்கி தருவதாக ஸ்ரீராம் நகரில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருந்த பாலாஜியும் (55), சென்னை ஆவடியை சேர்ந்த பாலசுப்பிரமணியனும்(41) கூறினராம். இதனால் பழனி செல்வம் ரூ.7 லட்சத்து 20 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் நீண்ட மாதங்கள் ஆகியும் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பழனி செல்வம் இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

அதன்ேபரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி, பாலசுப்பிரமணியன் ஆகியோரை தேடி வருகிறார்.


Related Tags :
Next Story