கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி


கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 19 Jan 2023 1:00 AM IST (Updated: 19 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்லில் தஞ்சாவூரை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூலித்தொழிலாளி

தஞ்சாவூரை சேர்ந்தவர் முருகன் (வயது32). கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவரின் 16 வயது மகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நெருங்கி பழகி வந்தனர். இதை அறிந்த உறவினர்கள் இருவரையும் கண்டித்து உள்ளனர்.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் வந்தனர். இங்கு தனியார் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அவர்கள் தனியாக குடித்தனம் நடத்த வீடும் தேடி வந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த முருகனின் குடும்பத்தினர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு கடுமையாக திட்டி உள்ளனர்.

தற்கொலை முயற்சி

இதனால் மனம் உடைந்த முருகன் நேற்று முன்தினம் எலி மருந்து வாங்கி தின்று உள்ளார். அவருடன் தங்கி இருந்த 16 வயது சிறுமிக்கும் அதை கொடுத்து உள்ளார். இருவரும் எலி மருந்தை தின்ற விவரத்தை உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர். அவர்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு சென்ற நாமக்கல் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தஞ்சாவூரில் இருந்து வந்த உறவினர்கள் இருவரையும் அங்கு அழைத்து சென்று விட்டனர். கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story