ஊஞ்சலூர் அருகே கொம்பனைப்புதூரில் குரங்கன் ஓடை தடுப்பணை கட்ட நிலம் அளவீடு செய்யும் பணி; உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்தது

ஊஞ்சலூர் அருகே கொம்பனைப்புதூரில் குரங்கன் ஓடை தடுப்பணை கட்ட நிலம் அளவீடு செய்யும் பணி; உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்தது
x

ஊஞ்சலூர் அருகே கொம்பனைப்புதூரில் குரங்கன் ஓடை தடுப்பணை கட்ட நிலம் அளவீடு செய்யும் பணி; உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்தது

ஈரோடு

ஊஞ்சலூர்

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள கொம்பனைபுதூரில் செல்லும் குரங்கன் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் மேற்படி மனுவை தள்ளுபடி செய்தும், உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்தும் நடவடிக்கை எடுக்கும் படி கடந்த கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன் பேரில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி தலைமையில் பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாவலுடன் நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியது. இதற்காக கொம்பனை புதூர் முதல் தேவம்பாளையம் காலனி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலம் அளவிடு செய்யப்பட்டது. அப்போது கிளாம்பாடி நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் சுசீலா (கொளத்துப்பாளையம்), பிரகாஷ் (கொளாநல்லி), ரமேஷ் (ஊஞ்சலூர்) ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Next Story